Skip to content

திருவண்ணாமலையில் 8வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் மகாதீபம்….

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் கடந்த 6-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும். இந்த நிலையில், திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 8-வது நாளாக (இன்று) கொழுந்துவிட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!