திருச்சி, திருவானைக்காவல் காந்தி ரோடு மேம்பாலம் ஏறும் சாலையில் இன்று காலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது இந்த பள்ளத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அம்மா மண்டபம் பகுதி வழியாக சென்று வந்து கொண்டிருக்கிறது. இந்த பள்ளம் அதிகாலை ஆறு முப்பது மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளம் ஏற்படும் போது போக்குவரத்து இல்லாத காரணத்தால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது இந்த பள்ளத்திற்கான
காரணம் சாலையில் அடியில் செல்லும் டிரைனேஜ் பெரிய குழாய் உடைந்து உள்ளது. இதனால் அதிலிருந்து வெளியேற்றும் தண்ணீர் வேகம் அதிகரித்து அடியில் மண்ணெரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டாகியுள்ளதாக மாநகராட்சியினர் தெரிவித்துள்ளனர் தற்போது இந்த பள்ளத்தை பொக்லின் எந்திரம் மூலம் பள்ளத்தை அகலப்படுத்தி டிரைனேஜ் குழாயை சீரமைக்கு பணியில் மாநகராட்சி என ஈடுபட்டு வருகின்றனர் இந்த பணி முடிய சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாகும் என்று தெரிவிக்கின்றனர்