திருவள்ளுவர் தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டடாலின் மாலை அணிவித்து மரியாதை செய்து விருதுகள் வழங்கினார். புதுக்கோட்டையிலும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புதுகை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாதொண்டைமான், கம்பன் கழகத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன்,செயலாளர்சம்பத்குமார்,வ.உ.சி.பேரவைகெளரவதலைவர் டாக்டர்ராமதாஸ்,பட்டிமன்ற பேச்சாளர் பாரதி, தி.மு.க.மாநிலவிவசாயதொழிலாளர்அணிதுணைத்தலைவர் த.சந்திரசேகரன்,தி.மு.க.தலைமைசெயற்குழுஉறுப்பினர் சுப.சரவணன் ஆகியோரும்மாலைஅணிவித்தனர்.