Skip to content
Home » திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (8.3.2023) சென்னை. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்  சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பெண் இனம் தழைத்திடும் வகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான முதல் பரிசிற்கான விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆல்பிஜான் வர்க்ஸ்,  தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்.

மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி செல்வி இளம்பிறைக்கு அறிவியல் ஆர்வம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதடைவதால் ஏற்படும் இறப்புகளை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்து சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பினை நல்கியமைக்காக 2022-23ம் ஆண்டிற்கான பெண் குழந்தைக்கான விருதினை வழங்கினார்.

உடன் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருபதி கீதா ஜீவன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேகர்பாபு, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்  இ. பரந்தாமன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் சமூக நலத்துறை இயக்குநர் திருமதி த. ரத்னா, இ.ஆ.ப., பேராசிரியர்   பர்வீன் சுல்தானா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *