தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது
இதில் வெண்ணாறுகோட்டம் பிள்ளை வாய்க்காலில் கரை வழியும் வரை தண்ணீர் வந்ததால் அம்மையகரம் சுற்றுவட்டார கிராமங்களில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அறுவடை செய்யும் நிலையில் உள்ள முனபட்ட குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. ராகுல் விவசாயிகள் பெரும்ப வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சாகுபடிக்காக விவசாயிகள் வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி மேற்கொண்ட நிலையில் தற்போது பிள்ளை வாய்க்காலில் ஏற்பட்ட உழைப்பால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே எனவே உடனடியாக கச்சமங்கலம் தலைப்பில் பிள்ளை வாய்க்காலை முற்றிலுமாக அடைத்து உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் கூறுகையில், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் குருவை உட்பட்ட சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டோம். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்பொழுது பிள்ளை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் மூழ்கியுள்ளது. எனவே தண்ணீர் வரத்தை முற்றிலும் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும். இவர் அவர் தெரிவித்தார்