மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கட்சியில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் விலகுவதாக அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது என திருப்பூர் துரைசாமி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.