Skip to content

சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியில் சுமார் 350பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்ந நிலையில் அந்த பகுதி மக்களுக்குக்காக அரசு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 52சென்ட் அளவில் சுடுகாட்டு இடம் ஒதுக்கி உள்ளது. இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இது குறித்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம்

பலமுறை அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தரக்கோரி மனு அளித்து உள்ளனர்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் உடனடியாக சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தரக்கோரி நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

error: Content is protected !!