Skip to content

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22 ஆம் தேதி பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது, இதில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது,

இந்நிலையில் இந்த பள்ளி ஆண்டு விழாவில், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய நிலையில்,

இந்த நிகழ்ச்சியில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாவின் கணவர் கணேஷ் என்பவரும், ஆண்டு விழாவில் பங்கேற்று, விழா மேடையில், சினிமா பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள், உள்ள நிலையில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகிறார் இந்நிலையில் அவர் அரசு பள்ளி விழாவில் பங்கேற்று பள்ளி மாணவர்களிடையே பாடல் பாடிய மாணவர்களுக்கு பரிசு வழங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,

இது குறித்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரனிடம் கேட்டபோது

ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் சுவிதா நாங்கள் அழைத்தோம் அவருடன் அவரது கணவர் கணேஷ் வந்துவிட்டார் பின்னர் மேடையில் ஏறி பாடல் பாடினார் அவரை நாங்கள் அழைக்கவில்லை என்ன தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரிடம், பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டதையடுத்து, அரசு பள்ளி ஆண்டு விழாவில், சரித்திர பதிவேடு குற்றவாளி கணேஷ் பங்கேற்று சினிமா பாடல் பாடிய விவகாரத்தில் கன்றாம்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரனை ஆம்பூர் அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிற்கு பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்..

error: Content is protected !!