‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. . புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.