Skip to content

திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்-விஜயசங்கர்….

  • by Authour

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். சுவாமி தரிசனம் முடிந்ததும் கோயில் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே ஸ்ரீசாந்த் பேசுகையில் குடும்பத்துடன் ஏழுமலையானை வழிப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் அதில் தமிழில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் யூ.எஸ்.சில்

நடைபெறும் டி.10 கிரிக்கெட் போட்டியில் விளையாட செல்ல உள்ளேன். இந்த முறை உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிரிக்கெட் வீரர் விஜயசங்கர் ஏழுமலையானை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏழுமலையானை வழிப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!