சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 தொடங்கு 2.22 வரை நிகழ உள்ளது. இதன் காரணமாக நாளை இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுகிறது. சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் சாத்தப்பட்டு பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணத்தால் நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.