திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் கூறியதாவது…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறாகும். அந்தத் தகவலை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.