திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், இந்த விவகாரம் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் நாளை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.