மகாராஷ்டிரா மாநிலம் புனோவை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர். தினமும் ஏராளமானோர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபடுகின்றனர். ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த
இவர்கள் மூன்று பேரும் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை கழுத்தில் அணிந்து கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டது குறிப்பிடத்தக்கது. கிலோ கணக்கில் கழுத்தில் தங்க ஆபரணங்களுடன் சாமி கும்பிட வந்த மூன்று பேரையும் சிலர் வேடிக்கை பார்த்தனர். ஆனால் அவர்கள் மற்றவர்களின் பார்வையை சாதாரணமாக கடந்து சென்றனர். இவர்களை கோயிலுக்கு வெளியே பார்த்த பல பக்தர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர்