Skip to content
Home » திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

  • by Authour

பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 8 மாதங்களில் உண்டியல் வருமானம்.1000 கோடியை கடந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *