Skip to content
Home » திருநெல்வேலி அருகே இளவட்டக் கல் தூக்கி தெறிக்கவிட்ட பெண்கள்….

திருநெல்வேலி அருகே இளவட்டக் கல் தூக்கி தெறிக்கவிட்ட பெண்கள்….

திருநெல்வேலி அருகே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி போட்டியில் பரிசு பெற்றனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே தூக்க முடியும் என்ற இளவட்டக்கல்லை கடந்த சில ஆண்டுகளாக பெண்களும் தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். இளவட்டக்கல் 55, 60, 98, 114 மற்றும்129 கிலோ எடை கொண்டதாக உள்ளன. உருண்டையாகவும் வழுக்கும் தன்மை கொண்டது. இளவட்டக் கல்லுக்கு கல்யாணக்கல் என்ற

பெயர் உள்ளது. வடலிவிளையில் நேற்று மாலை நடந்த போட்டியில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கி ராஜகுமாரி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் பெற்றார். ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல் போட்டியில் முதல் பரிசை விக்னேஷ், 2வது பரிசை பாலகிருஷ்ணன் பெற்றனர். பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டியில் ராஜகுமாரி என்ற பெண் முதலிடத்தையும் லெஜின் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.