Skip to content
Home » திருநங்கைகளுக்கு Phase-II-ல் வீடுகள் …தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் தகவல்

திருநங்கைகளுக்கு Phase-II-ல் வீடுகள் …தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. திருச்சி கலெக்டர் தகவல்

திருச்சியில் உள்ள திருநங்கைகளுக்கு
Phase-II-இல் வீடுகள் – தகுதி உள்ள திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்…

திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களுர் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள Phase-II-இல் வீடுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியான திருநங்கை பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் பெற்று படிவத்தினை 06.05.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் தகுதிகள்:

1. பயனாளியின் பெயரில் வீடோ, நிலமோ இருக்க கூடாது

2. பயனாளியின் பெயரில் எவ்வித குற்றவியல் நடவடிக்கை இருக்க கூடாது.

3.குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.1,25,000/- செலுத்த வேண்டும் (இத்தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடனாக பெற ஏற்பாடு செய்து தரப்படும்)

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருச்சி.
தொலைபேசி எண்: 0431 2413796

மேலும் தகவல்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *