Skip to content
Home » திருநங்கை கதையை கொண்டு எடுக்கபட்ட விநோதன் நீ … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

திருநங்கை கதையை கொண்டு எடுக்கபட்ட விநோதன் நீ … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

  • by Authour

*கோவையில் திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் பல்வேறு குறும்பட விருதுகளை பெற்ற குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் அவர்கள் இயக்கத்தில் திருநங்கை வாழ்வில் நடைபெறும் சம்பவத்தை கதையின் கருவாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற விநோதன் நீ குறும்படம் மற்றும் சியான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்

இயக்குனர் ஜெகதீஸ்வரன் ரகு குமார் இயக்கத்தில் யாசின் அவர்கள் நடித்துள்ள இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் தொலைபேசியில் பல்வேறு வசதிகள் உள்ளன இந்த கலியுகத்தில் பெண்களின் நம்பிக்கையை சமூக வலைதளம் மற்றும் தொலைபேசியினால் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மைய கருத்தாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற 8 வோல்டர் குறும்படத்தின்* *பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது*
*கோவையில் இவ்விரு படங்களின் பர்ஸ்ட் லுக்* *போஸ்டர்களை மாண்புமிகு* *முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதின் அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார் படத்தின் கதையை கேட்ட நீதிபதி அவர்கள் பட குழுவினரின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு பேசியது…. முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதின்  * *இன்று சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை அதன் பாதிப்புகளை அதற்கான தீர்வுகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இதுபோன்ற குறும்படங்கள்* *முக்கிய பங்காற்றும் என்றார் மேலும் இதுபோன்ற சமூக அவலங்களை வெளி கொண்டு வரும் வகையில் பல புதிய படைப்புகளை எடுக்க வேண்டும் என்றார் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர். கே. குமார் அவர்கள் பட குழுவினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடைபெற்ற அமைப்பின்* *ஜம்பெரும் விழாவில் கலந்து கொண்ட அமைப்பின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான மாண்புமிகு நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்கள் தனது உரையில் கூறியவற்றை நினைவு கூர்ந்தார் ஜம்பெரும் விழாவில் கலந்து கொண்ட* *மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள்* *பேசியதாவது தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது இந்த தளங்களை முறையாக மக்களுக்கு பயன் தரும் வகையில்* *அதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல் பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றார் இவ்விழாவில் அமைப்பின் கொளவரவ தலைவரும் மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் கூறிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்தும் விதத்தில் இப்படக்குழவினர் செய்து வருவது பாரட்டுக்குறியது என்றார் விநோதன் நீ குறும்படத்தில் நடிகைகள் ஜீலி திருநங்கை கோவை மீரா எஸ்தர் ராணி வீரலக்ஷ்மி நடிகர்கள் கார்த்தி தர்மா ஆன்டனி தாமஸ் ஜான் விஜய் முரளிதரன் சாமி மீசைபால விஜய் லோகன் அங்கமுத்து பழனிசாமி பரூக் காளிஸ்வரன் சுருள் ராமசாமி விஜய்காளியப்பன் ஆரோக்கியசாமி ஆகியோர் நடித்துள்ளனர் இப்பட ஒளிப்பதிவை யாசின் இசையை பேராவூரணி பாலகுமார் அவர்களும் செய்கின்றனர் புரொடக்சன் மேனஜராக செந்தில் குமரன் அசோசியேட் மெனேஜராக யோக ராஜ் ஆகியோர் பணியாற்றினர்.

இப்படத்தின் கதை திரை கதை பாடல் வசனம் எடிட்டிங் பணிகளை இயக்குனர் குமார் தங்கவேல் செய்கிறார் இப்படத்தில்*
*அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசோஸியட் இயக்குனராவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் இணை செயலாளர் எம்.விஜய்ராவ் மற்றும் பட குழுவினர் திரளாக கலந்து கொண்டனர் பட போஸ்டர் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் சார்பில் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2023 நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *