சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று செந்துறை ஒன்றியத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம் உள்புறம் ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிகாரிகளுக்கு திருமாவளவன் பூரண ஒத்துழைப்பு வழங்கினர். பின்னர் வாகனத்தில் எதுவும் இல்லாத அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். தொல் திருமாவளவன் தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கி சிவராமபுரம் சன்னாசி நல்லூர் ஆகிய கிராமங்களுக்கு சென்றார்.