ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது உருவப்படம் இன்று காலை சட்டமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.