பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தேசிய அளவிலான 17வது நெல் திருவிழா நடைபெற்றது. கிரியேட் நமது பாரம்பரிய நெல்லை காப்போம் சார்பில் நடைபெற்ற நெல் திருவிழாவில் பராம்பரிய விதைகள் மற்றும் இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட
விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில்
மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சீரக சம்பா,தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல் விதைகள் 100 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.