Skip to content
Home » திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர். இவ்வூரின் தென் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோயில். திருக்கருகாவூர் என மக்களால் அழைக்கப் பெறும் இத் தலம் மாதவிவனம், முல்லை வனம், கர்ப்பபுரி, திருக்கரு காவூர் என பல பெயர்களில் புராண நூல்களில் குறிப்பிடப் படுகிறது. மாதவி (முல்லைக் கொடியை) தல விருட்சமாகக் கொண்டுள்ளதால், மாதவிவனம் ( முல்லை வனம்) என்றும், தாயின் வயிற்றில் உள்ள கருவைக் காக்கின்ற ஊர் என்பதால் திருக்கருகாவூர் எனவும் பெயர் காரணம் வரப் பெற்றது. கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் சுவாமி திருக் கோயில் வைகாசி விசாகப் பெருந் திருவிழா வையொட்டி கடந்த 22 ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 23 ந் தேதி காலை நவக்கிரஹ ஹோமம் நடந்தது. 24-ம் தேதி சுவாமி கொடி மரத்தின் முன் எழுந்தருள, கொடியேற்றம்

நடந்தது. இரவு இரவு வெள்ளி பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதியுலா, 25 ந் தேதி இரவு சூரிய பிரபையில் சுவாமி அம்பாள் வீதியுலா, 26 ந் தேதி இரவு பூத வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா, 27 ந் தேதி இரவு சேஷ வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா, 28 ந் தேதி இரவு ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா, 29 ந் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா வந்தது. நேற்று இரவு சுவாமி, அம்பாள் திருக் கல்யாணம் நடந்தது. முன்னதாக அக்கிரஹாரம் பிள்ளையார் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் சீர் வரிசை தட்டுகளை ஊர்வலமாக வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். சுவாமி அம்பாள் திருக்கல்யாணத்தில்திருக் கோயில் செயல் அலுவலர் ஆசைத் தம்பி, திருக்கோயில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!