தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்களுடன் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான பக்கெட், மக்கு வழங்கின. முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கியதுடன், கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களையும் வழங்கினர். இதில் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சம்பந்தம், முன்னாள் தலைவர் கணேசன், அன்னை சாரதா மகளிர் மன்ற நிறுவனர் தில்லைநாயகி, திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.