Skip to content

திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

  • by Authour

திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான (ஆகஸ்ட் 1-ந் தேதி) லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 41-வது திலகர் தேசிய விருது வழங்கும் விழா புனேவில் இன்று நடைபெற்றது. விழாவில் லோகமான்ய திலக் தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் சரத்பவாரும் கலந்து கொண்டார்.

விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த விருதை பெறுவது எனது அதிர்ஷ்டம். இந்த விருதைப் பெற்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். நீங்கள் ஒரு விருதை பெறும்போது, உங்கள் பொறுப்பு இன்னும் அதிகரிக்கிறது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். விருது தொகையை நமாமி கங்கை பணிக்கு வழங்குகிறேன்.

இளைஞர்களின் எதிர்காலத்திற்காக திலகர் பல அமைப்புகளை உருவாக்கினார். இந்தியாவின் நம்பிக்கை, கலாசாரம், நம்பிக்கைகள்,இவை அனைத்தும் பின்தங்கியவை என்று ஆங்கிலேயர்கள் ஒரு அனுமானம் செய்தனர். ஆனால் திலக் ஜி இதையும் தவறு என்று நிரூபித்தார். அதனால்தான் இந்திய மக்கள் தாங்களாக முன்வந்து திலகருக்கு அங்கீகாரம் வழங்கினர். அவருக்கு லோக்மான்யா என்ற பட்டத்தை வழங்கினர்.இந்திய அமைதியின் தந்தை என்று ஆங்கிலேயர்கள் திலகரை அழைத்தனர். திலக் ஜி ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் திசையை மாற்றினார். மகாத்மா காந்தி திலக்கை நவீன இந்தியாவின் தந்தை என்று அழைத்தார் என கூறினார். 

மோடி விழாவில் சரத்பவார் கலந்து கொண்டது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.   உத்தவ் தாக்கரே மற்றும்  காங்கிரசார் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *