கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளபாளையம் அரசு மதுபான கடையில் இரவில் பின்புறமாக சுவரை துளையிட்டு சுமார் 150 க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்களை திருடி சென்றனர் இதில் 28 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்டன.
காவல்துறை மற்றும் மோப்ப நாய்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். மேலும் மதுபான கடையில் இருந்த நான்கு சிசிடிவி கேமரா மற்றும் பதிவுகளையும் எடுத்துச் சென்ற மர்ம நபர்கள். குறித்து லாலாபேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.