கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் இருவரையும் பிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வழிப்றி செய்த திருடர்கள் போலீசாரை கண்டவுடன் அவர்களிடமிருந்து தப்பி செல்ல அருகில் இருந்த பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளனர். இதில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு எற்பட்டது. விசாரணையில் கரூர், வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி மற்றும் மோத்தீஸ் ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் சேர்க்கப்படடனர். பின்னர் அவர்களிடமிருந்து வழிபறி செய்த பொருட்கள் மீட்டு சிகிச்சை முடிந்ததும் சிறையில் அடைக்கப்பட்டனர்.