Skip to content

மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

  • by Authour

மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு 

திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி மூதாட்டி அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்து இருந்த 12 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.இந்த சம்பவம் குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் நகையை பறித்து சென்ற மூன்று மர்ம ஆசாமிகள் யார்? நகை இய பறித்த கொடுத்த மூதாட்டி யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சிகிச்சை பெற்று வந்த வாலிபர் படுக்கையிலிருந்து தவறி விழுந்து சாவு

திருச்சி மாவட்டம் ஆங்கரை அருகில் உள்ள முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு மாலி (வயது 34) இவர் கடந்த பிப்ரவரி 22ந் தேதி துறையூரில் நடைபெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் போது படுக்கையில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து
மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 7 ந்தேதி சிகிச்சை பலனின்றி அழுகுமாலி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் இளம்பெண் மாயம்

திருச்சி ஏப் 9 – திருச்சி ஏர்போர்ட் இந்திரா நகர் ராஜமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் சையது முஸ்தபா இவரது மனைவி ஷகிலா (வயது 38) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்தது ஷகிலா எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ரகமதுன்னிஷா ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷகிலாவை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!