கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரி வரும் வழியில் பல வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் வந்து கொண்டிருந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் சங்ககரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பச்சாபாளையம் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியை போலீசார் மடகடகினர். கண்டெய்னர் லாரியில் டிரைவர் உள்பட 7 பேர் இருந்தனர். கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக பணம் மற்றும் ஒரு சொகுசு கார் இருந்தது. அந்த பணம் பணம் குறித்து அவர்கள் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.
3பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். விசாரணையில் 7 பேரும் கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தையும், சொகுசு காரையும் வட மாநிலத்துக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. எனவே அவர்களை கைது செய்ய முயன்றபோது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றனர்.
இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவன் இறந்தான். பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.67 லட்சம் இருந்தது. உடனடியாக அந்த லாரியை போலீசார் குமாரபாளையம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மற்ற 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.