கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் பகுதியில் மாடல் காலனி என்ற இடம் உள்ளது. இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 9 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது அங்கு கலைச்செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ டிவி கட்டில் உணவுப் பொருட்கள் போன்ற பொருள்களை உடைத்து சேதப்படுத்தியது. வீட்டில் இருந்த கலைச்செல்வி மற்றும் அவரது அம்மா இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் யானை வீட்டை உடைப்பதை அறிந்து உயிருக்கு பயந்து வீட்டின் பின் பகுதியில் அமைந்துள்ள கழிவறையில் உயிர் தப்பிக்க ஒளிந்து இருந்தனர் யானைகள் வீட்டின் முன்புறமும் பின்புறமும் நின்றதால் அருகில் உள்ள வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர் இந்நிலையில் சிறிது நேரம் அங்கேயே நின்று அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்த பின்பு வனத்துறையினரும் அருகில் உள்ளவர்களும் யானைகளை சத்தம் போட்டு வனப் பகுதிக்குள் விரட்டினார் சுமார் ஒரு மணி அளவில் வந்த காட்டு யானைகள் வீட்டை உடைத்து வீட்டின் முன்பு நின்று செடி கொடிகளை சாப்பிட்டு சுமார் மூன்று முப்பது மணி அளவில் யானைகள் வனப்பகுதிக்கு சென்றது . வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் யானைகள் வீட்டின் வெளியே எடுத்து வீசியது இதில் அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது தகவல் அறிந்து வந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் வனத்துறையினரிடம் எஸ்டேட் மேலாளர்களிடமும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து யானைகள் சேதப்படுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பண உதவி வழங்கினர். யானைகள் வீட்டின் அருகே வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.