Skip to content

திருச்சியில் தேசிய அளவிலான திரைபபடம் – குறும்படம் திரையிடும் நிகழ்வு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித வளனார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைபபடம் மற்றும் குறும்படம் திரையிடும் நிகழ்வு கூகாய் திரைப்பட நிறுவனம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈரான் நாட்டை சேர்ந்த ஆவனபட இயக்குனர் அலி அட்ஷானி இயக்கத்தில் உருவான பேப்பர் டிரீம் அயர்லாந்து நாட்டை சேர்ந்த இயக்குனர் கால்ம் பேரெட் இயக்கத்தில் உருவான கெயட் கேர்ள் ஸ்பெயின் நாட்டின் காலா சைமன் இயக்கத்தில் உருவான ஆல்கராஸ்

தமிழில் இயக்குனர் ரமேஷ் கண்ணன் இயக்கத்தில் உருவான சாதிவருது ஜெயஸ் இயக்கத்தில் உருவான ஆர்யமாலா வடமொழியில் பாத்திமா இயக்கத்தில் உருவான வெயில்ட் இன்ஷஸ் குணால் வட்சவா இயக்கத்தில் உருவான தி மெர்சன்ட் ஆப் வினாஷ்னா உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இப்பட்ங்களின் இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் மாணவ மாணவிகள் இணையதளம் வாயிலாக கலந்துறையாடி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பல்வேறு படைப்புகள் உருவான விதம் குறித்த தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர் கீரா அவர்கள் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள வீமன் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

கூகாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல் வீமன் திரைப்பட இயக்குனர் கீரா தேசிய விருது பெற்ற திரைபடத்தின் நடிகையும் வீமன் திரைப்படத்தின் நாயகியுமான வென்மதி குறும்பட இயக்குனர் ரிஸ்வான் தேசிய விருது பெற்ற குறும்பட நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லி கொடி விளையாட்டு பிரிவு செயலாளர் எழில் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

கூகாய் திரைபட நிறுவனம் சார்பில் வீமன் படத்தின் நடித்த நாயகி வெண்மதிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் நடிகருக்கான விருது வினு விற்கும் வழங்கப்பட்டது.

இந்நிகவிற்க்கான ஏற்பாடுகளை புனித வளனார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர் தமிழரசி பேராசிரியர்கள் சதிஷ் ,முருகவேல் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *