Skip to content

தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆரவாரத்துடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி, இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன் என கூறினார். மேலும் எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும் என தெரிவித்த அவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால் தான் தப்பு என அறிவுரை வழங்கினார்.

அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, 18 வயது நினைவுகளை நினைவு படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும் அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது என்றார். 18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு சிங்கிள் சைடு காதல் இருந்த போது ரசித்த பாடல் என்னவென்றால் “மஞ்சம் வந்த தென்றலுக்கு” என்ற பாடல் என பதிலளித்து அந்த பாடலை பாடினார். திருமணம் குறித்தான கேள்விக்கு ஏன் திருமணம் செய்கிறோம் என்றால் உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழந்த பெண் சொல்ல வேண்டும் அது தான் வாழ்க்கை எதற்கு தான் திருமணம் என கூறினார்.

பின்னர் மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடினார். தொடர்ந்து நடனமாடும் படி கேட்டதற்கு வாய்ப்பில்லை என நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும் மாணவர்களை தம்பிகள் என்று அன்போடு அழைத்த அவர் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி நான் கூறுகிறேன் “அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள சைரன் திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அது குறித்து பேசிய ஜெயம்ரவி, சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் எனவும் 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்க கூடிய கதை இது எனவும் அனைவரும் இந்த படத்தை விரும்புவர் என தெரிவித்தார்.

மேலும் சைரன் படத்தில் அவர் நடித்துள்ள இரண்டு கதாப்பாத்திரங்கள் போலும் பொன்னியின் செல்வன் பட வசனத்தையும் பேசி அசத்தினார். அப்போது மாணவிகள் சந்தோஷ் சந்தோஷ் என ஆர்ப்பறித்தனர். அதனை தொடர்ந்து சைரன் படத்தின் 10 நொடி காட்சிகள் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சைரன் படம் மிக முக்கியமான படம், குடும்பத்திற்காக இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு சவாலாக தான் இருந்தது. 15 ஆண்டுகால வித்தியாசங்களை இதில் அனைவரும் காண்பித்துள்ளோம். எனவே இந்த படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *