கோவையில் மகளிருக்கான கடன் வழங்கு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்
செந்தில் பாலாஜி,…. கோடை காலத்தில் மின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலான மின் தேவைக்காக ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு ஆய்வில் உள்ளதாகவும், முதல்வரின் வழிகாட்டுதலில் பேரில் கோடை காலத்தில் மின் விநியோகம் தடைபடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் *டாஸ்மார்க் தலைமை அலுவலகம் மற்றும் கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு – சோதனை முடிந்த பிறகு விரிவாக கூறுகிறேன் என்றார். அண்ணாமலை செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு – அரசியல் கோமாளிகளுக்கு நான் பதில் சொல்லாமாட்டேன் எனவும் அண்ணாமலை தொடர்பான கேள்வியை தவிர்த்து விடுங்கள் என செந்தில் பாலாஜி பதிலளித்தார். மேலும் காலையில் ஒரு நிலைப்பாடு ,மாலையில் ஒரு நிலைப்பாடோடு பயணிப்பவர்களிடத்தில் நான் என்ன கருத்தை எதிர்பார்க்க முடியும் பாஜக மற்றும் நீங்கள் கூறும் நபர்களால் என்ன பயன் என பாஜக மீது செந்தில் பாலாஜி விமர்சனம் செய்தார்.