Skip to content

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  3 மடங்கு அதிகமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வாணியம்பாடி திம்மாம்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  3 மடங்கு அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. தேவையை விட அதிகமாக சுகாதார நிலையங்களை அமைத்து, இலக்கை எட்டிவிட்டீர்கள், இனிமேல் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்காதீர்கள் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

error: Content is protected !!