திருச்சி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வயலூர் ரோடு கத்திரி வாய்க்கால் மற்றும் தென்னூர் உழவர் சந்தை பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும், தென்னூர் உழவர் சந்தையில் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மஞ்சள்பை பயன்படுத்த ஊக்குவித்து மஞ்சள் பைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி நகர் நல அலுவலர்
மணிவண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் சேகரிக்கப்பட்டன. அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் இன்று 120.68 டன் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.