திருச்சி, மாநகராட்சி தென்னூர் சாலை மேம்பாலத்தில் (RoB) பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 41 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதை வாகனப் போக்குவரத்துக்கு மூடுமாறு போக்குவரத்துக் காவல்துறையிடம் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது..
சென்னையைச் சேர்ந்த ஒரு ஒப்பந்த நிறுவனம் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.பாலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையில் காணப்படும் இடைவெளிகள் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துவதால், சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில்
கொண்டு, பணிகளை துவக்க, மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதலை, நகராட்சி அதிகாரிகள் பெற்று. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 57(7)ன்படி, குடியிருப்பாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் பணிகளைத் தொடங்கலாம்.
பாலம் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பெரிய பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை பாலத்தின் இரண்டு பக்கத்திலுள்ள அடுக்குகள் மற்றும் தாங்கு உருளைகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள (strip seal)விரிவாக்க இணைப்புகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. பழுதடைந்த இணைப்புகள் பாலத்தில் சுமார் ஒன்பது அங்குல அகலத்திற்கு இடைவெளிகளை உருவாக்கியுள்ளன.என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்தது ஒரு மாதமாவது வாகனங்கள் செல்ல பாலத்தை மூட வேண்டும். வாகன போக்குவரத்துக்கு இடையே பாலத்தை சரிசெய்வது என்பது பணியின் தரத்தை பாதிக்கும், இது சாலை பயனாளர்களுக்கு பாதுகாப்பற்றது,என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
34.1 கோடியில் (ரயில்வே பகுதியை தவிர்த்து) புனரமைப்பு பணிக்காக மெயின்கார்ட் கேட் அருகே உள்ள கோட்டை ஸ்டேஷன் ரோடு விரைவில் இடிக்கப்பட உள்ளதால், தென்னூர் ரோடு போக்குவரத்தை மாற்றியமைக்கவும், வாகன இயக்கத்தை சீர்செய்யவும் முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகரப் பகுதிகளை வணிக மையங்களுடன் இணைப்பதில் இரு பாலங்களும் இன்றியமையாதவை.
போக்குவரத்தை திசைதிருப்ப மாநகரப் போக்குவரத்து போலீஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை இறுதி செய்யப்பட்டவுடன் பணி கள் தொடங்கும் என்று அதிகாரி கூறினார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஏற்கனவே மாரிஸ் மேம்பால பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்பணிகளே இன்னும் முடிக்கப்படாமிலிருக்க தற்போது தென்னூர் பாலமும் விரைவில் மூடப்படும் என்ற அறிவிப்பு வாகன ஒட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாற்றுவழியான கரூர் பைபாஸ் பாலமும் பாலக்கரை மேம்பாலமும் தான் ஒரே தீர்வு இதனால் திருச்சி மாநகர மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கவுள்ளனர்.
என்றனர்.