தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி தமிழகத்தின் லெமன் சிட்டி ஆகும். மேலும் தற்பொழுது புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள்,மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் . சந்தையில் ஒரு
கிலோ எலுமிச்சைப்பழம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும் எலுமிச்சைப்பழம் புளியங்குடி மார்க்கெட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது . குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.