தேனி எம்பி தேர்தலில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 3 நாட்கள் நேரில் ஆஜராகி சாட்சிகளையும், அவங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதைபோல் தேர்தல் அதிகாரிகள் முன் ஆஜராகி சாட்சிகளையும், அவங்களையும் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றே தினம் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.