தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி கடலூரில கடலில் கலக்கிறது.
பெஞ்சல் புயல் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இன்று காலை நிரவரப்படி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. படிப்படியாக அது உஎயர்ந்து வினாடிக்கு தற்போது 2.45 லடசம் கனஅடியாக உயர்ந்தது.
தற்போதும் அந்த பகுதியில் மழை யெ்து கொண்டு இருப்பதால்ஆபத்தான கட்டத்தில் வெள்ளம் பாய்கிறது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்று பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.