பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு முதலமைச்சர் சொல்ல வேண்டிய கருத்துகளா இவை? இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். எங்களை விமர்சிப்பதால் நாங்கள் ஒன்றும் கவலைப்படவில்லை, எங்களின் மனசாட்சிக்கு உட்பட்டு அரசியலமைப்பின் படி கடமையைச் செய்து வருகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…
- by Authour
