திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். பிளாஸ்டிக் கடை வைத்துள்ளார். இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 கிராம் தங்கம், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருந்தது.
இதுகுறித்து கோட்டை போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிந்துநதி விசாரணை நடத்தினார். பட்டப்பகலில் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.