Skip to content
Home » போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல் துறையினர் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதை தொடர்ந்து ஆர்.எஸ் புரம் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார் ஒன்று வந்தது.

அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து ஒருவனை மடக்கிப் பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பதும் அவனுடைய கூட்டாளிகளான மனோஜ் ,  17 வயது சிறுவன் மற்றும் தடாகம் பகுதியைச் சேர்ந்த ஆசாருதீன் ஆகியோர் போலி சாவி மூலம் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. மேலும் கோவை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி சென்று  அசாருதீனிடம் ஒப்படைத்து ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.2,500-ஐ 3 பேரும் வாங்கி உள்ளனர்.

மேலும் அந்த வாகனங்களை ஆசாருதீன் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை மற்றவர்களிடம் அடகு வைத்து உள்ளார். இதுபோன்று மூன்று பேரும் போலி சாவிகளை பயன்படுத்தி 20 – க்கு மேற்பட்ட சாலையோரம் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும், மூன்று பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!