திருச்சி, வயலூர் ரோடு பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இதில் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த நரேஷ் பாபு (23) என்பவர் தனது நண்பர் சஞ்சய் என்பவருடன் தங்கியுள்ளார். இவர்கள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு மர்ம ஆசாமி ஒருவர் விடுதி அறை
ஜன்னல் வழியாக நரேஷ் பாபு பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.13 ஆயிரத்து 600 பணத்தை திருடிவிட்டனர். இது குறித்து அவர் உறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.