Skip to content
Home » அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழரசனுக்கு நெஞ்சுவலி பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மகன் உடனிருந்து கவனித்து கொள்வதால், சிறுகடம்பூரில் உள்ள அவர்களது வீடு பூட்டி இருந்தது.

நேற்றிரவு பூட்டிய வீட்டில் வெளிச்சம் தெரிந்ததையடுத்து, அருகிலுள்ளவர்கள் வந்து பார்த்தபோது வீடு திறந்து இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் திருட்டு நடந்தது தெரிய வந்தது. உடனே அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்க்கும்போது, வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 2 நெக்லஸ், 3 செயின், 3 மோதிரம், தோடு 1 செட் என 27 சவரன் நகை, 30 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இரும்புலிகுறிச்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைப்பட்டு விசாணை செய்து வருகின்றனர்.
இதே கிராமத்தில் சில மாதத்திற்கு முன்பு ஐந்து இடங்களில் சின்னதுரை, காசிநாதன், சர்வேயர் ராமலிங்கம், கந்தசாமி ஆகியோரின் வீட்டில் ஆள் இல்லாதபோது திருட்டு நடைபெற்றுள்ளது. தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!