நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜவுளி தொழிலதிபர் மணிகண்டன். இவரது வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், வெள்ளி பொருட்களையும் கும்பல் கொள்ளையடித்துள்ளது. வீட்டில் இருந்தவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மோடமங்கலம் சென்ற நிலையில் திட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், ஜவுளி உற்பத்தியாளர் மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை குமாரபாளையம் போலீசார் சேகரித்துள்ளனர்.