அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தீயவர் குலைகள் நடுங்க. இப்படத்தில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பரத் இசை அமைத்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.