சிக்கிம் மாநிலத்தில் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடும் பணி தீவிரமடைந்துள்ளன. அத்துடன் வெள்ளப்பெருக்கால் NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது. அதேபோல் தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில் மேக வெடிப்பால் தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.