லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் லியோ திரைப்படம் வெளியிடப்பட்ட அரோமா திரையரங்கிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அப்போது அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி லோகேஷ் கனகராஜை சூழ்ந்து கொண்டனர். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய லோகேஷ் கனகராஜ் அனைவருக்கும் படக்குழு சார்பில் நன்றி தெரிவித்தார்.
அப்போது ரசிகர் கூட்டத்தில் சிக்கிய லோகேஷ் கனகராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் கொச்சினின் நடைபெற இருந்த ரசிகர்கள் சந்திப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்காலிக ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் லோகேஷ்கனகராஜ் பதிவு செய்துள்ளார். மீண்டும் விரைவில் கேரளா செல்ல உள்ளதாகவும், தொடர்நது லியோ திரைப்படத்திற்கு ஆதரவு தரவேண்டும் என பதிவு செய்துள்ளார்.