Skip to content
Home » நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வாணியம்பாடி நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் ஆகியோர் தலைமையில் 49 கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சங்கர் கணேஷ் என்பவர் கூறுகையில், “7 வருடமாக கட்சியில் இருந்துள்ளேன், தற்போது கட்சியில் இருந்து விலகுகின்றேன்,  சென்னையில் தேர்தலுக்காக நான் ஆட்டோவில் பரப்புரை செய்தேன். வாணியம்பாடி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கே நாம் தமிழர் கட்சியினரிடையே நிறைய குளறுபடி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலளாரிடம் கூறினால், அவரது போனையே தலைமை எடுப்பதில்லை. அவருக்கே அந்த நிலைமை என்றால், தொண்டர்களுக்கு நிலைமை வேறு..

பிரபாகரனுக்காக சென்றோம், ஆனால் அங்கு நடப்பது வேறு! வாணியம்பாடி நகரம் மற்றும் 15 பூத்திலிருந்து அனைவரும் கட்சியில் இருந்து விலகுகிறோம், 5 பூத்களில் 2020 சட்டமன்ற தேர்தலில் 132 ஓட்டுகள் தான் பெற்றனர். ஆனால் நாங்கள் வேலை செய்து தற்போது 382 ஓட்டுகள் வாங்கி தந்தோம், ஆனால் மாவட்ட செயலாளருக்கு தலைமை பதில் அளிக்கவில்லை” என்றார். முன்னதாக கடந்த மாதம் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகிய இருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!