Skip to content

டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி மாநகரில் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது.இந்த காந்தி மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுஇரவு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மார்க்கெட் – பால் பண்ணை சாலையை கடந்து காந்தி மார்க்கெட்டுக்குள் வர முயன்றுள்ளனர். அப்போது லோடு ஏற்றி வந்த வேன் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த இளைஞர்கள் அனைவரும் போதையில் இருந்ததால் டிரைவர் அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அருகில் இருந்த தங்களது நண்பர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோரை உடன் அழைத்துக் கொண்டு அங்கு வந்து வேன் டிரைவரையும், லோடு ஏற்றிக் கொண்டிருந்த லோடுமேன்களையும் தொடர்ச்சியாக தாக்கத் தொடங்கினர்.

இதனால் அங்கு பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் பயந்து ஒதுங்கி நின்றனர். இந்த சம்பவத்தில் இருந்தது ஆத்திரம் தாங்காத அந்த இளைஞர்கள் மீண்டும் காந்தி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்து அப்பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகள் மீது தொடர்ச்சியாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால் வியாபாரிகளின் பொருட்கள் பெரும் சேதம் ஏற்பட்டது.இந்த சம்பவம்குறித்து தகவல் இருந்து காந்தி மார்க்கெட் போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை  செய்தார்கள். இது தொடர்பாக கார்த்தி மார்க்கெட் வியாபாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியை சேர்ந்த 4வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் காந்தி மார்க்கெட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் காயத்துடன் திருச்சி அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்களின் உறவினர்கள் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் தங்களுடைய வாலிபர்களை சிலர் தாக்கி விட்டதாக புகார் மனு கொடுத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பினரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!