திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(35). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தைதராததால் அண்ணாமலை மன உளைச்சலில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி கீர்த்தனா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..
- by Authour
